Tuesday, March 08, 2005

தழும்பு

உன் வாழ்க்கையின் நிம்மதிக்கு
என் மெளனத்தை அளித்தேன்
பதிலாக,
என் ஆசைகளை நீ நிராசைகளாக்கினாய்

உன் சந்தோஷத்திற்கு
என் உரிமைகளை விட்டுக் கொடுத்தேன்
பதிலாக,
உன் கடமைகளை நீ மறந்தாய்

என்ன தவம் செய்தேன் நான்
இந்த பிறவியடைய !!!!!

என் கடமைகளை நான் உணர்ந்தேன்
நீ ஏனோ உணர மறந்தாய்
என் உணர்ச்சிகளை நீ மதிக்க மறந்தாய்

என் விதியை நொந்துக் கொள்ளவா!
இல்லை, உன்மேல் நான் வைத்த நம்பிக்கையை காரணமாக்கவா!

உன்னால், விதியின் கயிற்றில் என் வாழ்க்கை தொங்க
இன்றா, நாளையா என்ற கேள்வி எழும்ப
'எனக்கென்ன?' என்று நீ ஒதுங்க
உன் பாவத்திற்கு மன்னிப்பில்லை என்று உனக்கு விளங்க
வெகு நாளில்லை

கசப்பான மனம் கொண்ட உன் மீது
அன்பு செலுத்த முடியவில்லை
முயற்சி செய்யவும் விரும்பவில்லை

அன்பே உருவாக இருக்க வேண்டி நீ
ஏனோ தடம் மாறிச் சென்றாய்

உன்னை மன்னிக்க இயலவில்லை
மறக்க முயற்ச்சிக்கிறேன்

மனம் கொண்ட காயம் ஆறாது
நீ செய்த பாவம் மாறாது