Tuesday, February 15, 2005

வாய்ப்பு கொடு

என்னை நான் மாற்றிக் கொள்ள
ஒரு வாய்ப்பு கொடு

என் கோபத்தைக் கட்டுப்படுத்த
ஒரு வாய்ப்பு கொடு

நான் பேசிய வார்த்தைகள், உன்னால் மறக்க இயலாது
மன்னித்து விடு

நான் ஆரம்பித்த விவாதங்கள், உன்னால் உதர இயலாது
மன்னித்து விடு

எனது தவறுகளை திருத்திக் கொள்ள
ஒரு வாய்ப்பு கொடு

இந்த உறவின் அறுமையையறிய
ஒரு வாய்ப்பு கொடு

பதில் தர இயலாத கணவனின் சடலத்தை பார்த்தாள் அவள்

Sunday, February 13, 2005

காலம்

கடந்தக் காலம்
நீயும் நானும் சேர்ந்திருந்த காலம், நமது வருங்காலத்தைப் பற்றியக் கனவு, கடந்த காலமாயிற்று

நிகழ் காலம்
உன் பாதையில் நீ செல்ல
என் பாதையில் நான் செல்ல, நிகழ் காலமாயிற்று

வருங் காலம்
நிறம் மாறாத நிகழ்வுகள்
மகிழ்ச்சித் தந்த கடந்தக் காலத்தை எண்ணிப் பார்க்க தூண்டும் வருங்காலம்.....

காலத்தின் போக்கில் நாம் இருவரும் செல்ல
இத்தின வாழ்த்துக்களை உனக்கு சொல்லியவாறு செல்கிறேன்.....