Wednesday, November 16, 2005

From a reader....

காலம் மூன்றிலும்

காத்திருந்தாய் வாய்ப்புக்காக - அந்த
காற்றையே தூது விட்டு, வாழ்க்கையெனும்
காதலின் பதிலறிய.

காரிருள், பனி இரவில், ஏனோ
காட்சியில் தோன்றிய பாதைகள்
காணாமல் போனதோ
கானல் நீராகி, பயணத்தில் தடங்களோ

காலையில் பனி விலக
காக்கையும் கானம் பாடும்
காண்போரின் மணம் குளிரக்
காய்ந்த மலரும் கண்பறிக்கும்- சிறு
காலைப்பணி மகுடம் சூடி. அந்த

காலையில் வாழ்த்துகிறேன் கனவுகள் மெய்ப்பட - ஏனெனில்
காட்டு வழியில்- கதிரவன்
காட்டும் வழியில், பயணங்கள் முடிவதில்லை

காலம் மூன்றிலும்

by Sai.


Thank you for your thoughts Sai.

Friday, April 01, 2005

நினைத்து பார்த்தேன்

என் மனம் உன்னை நினைத்து பறக்க
பகல் இரவு என்ன? என்னையே நான் மறக்க
நாள் முழுவதும் உன்னையே நினைக்க
இரவில் நீயென்றெண்ணி தலையனையை அனைக்க

உன் தோழிகளுடன் நீ களிப்புடன் சிரிக்க
என் மனச் சிறகு ஆனந்தத்துடன் விரிக்க
காதல் என் மனதைக் கட்டிப் பிடிக்க
உன்னிடம் நான் அதை சொல்ல துடிக்க
உன் மையிட்ட விழிகள் என்னை அழைக்க

உன் அழகினில் என் மனத்தை துளைக்க
என் மன ஆசையை உன்னிடம் உரைக்க
உன்னை நோக்கி தடுமாற்றத்துடன் நடக்க
எண்ணங்களை உன்னிடம் தயக்கத்துடன் விளக்க
உன் மெளனத்தின் சம்மதத்துடன் விவாகத்தை முடிக்க

என் மனம் உன்னை நினைத்து பறக்க
பகல் இரவு என்ன? என்னையே நான் மறக்க
நாள் முழுவதும் உன்னையே நினைக்க
இரவில் நீயென்றெண்ணி தலையனையை அனைக்க

இரு இரவுகள் தனியே காத்திருந்தான்
தாய் வீடுச் சென்ற மனைவிக்காக

Tuesday, March 29, 2005

தளராதே

வாழ்கையில் படிப்பது சில
உணர்ந்து அறிவது பல
யார் செய்த பாவம்
நீ ஏனோ பிறந்தாய்

உன்னால் முடிந்தவரை
நீ போராடினாய்
போராடுவாய்
மனம் தளராதே

அதனை மீறி விதி உன் கையில்
இல்லையடி மடப்பெண்ணே
குழப்பமின்றி தெளிந்து விளையாடு
சதுரங்கம் ஆடும் நீ, மறந்தாயே

நான் சொல்கிறேன், நம்பு
உன்னால் முடியும்
உணர்ந்து அறிவது பல
வாழ்கையில் படிப்பது சில

Sunday, March 13, 2005

அவ்வருடம், இந்நாள்

முன்னூறு நாள் காத்திருந்து

வெளிச்சத்தைப் பார்த்தாள் அவள்.

அழுகையுடன் உலகறிந்து

அன்னை பிதாவை கண்டாள் அவள்.

தவழ்ந்து தவழ்ந்து மழலைக் கண்டு

சிறு நடையுடன் அவள் பயணம் ஆரம்பித்தது.

Tuesday, March 08, 2005

தழும்பு

உன் வாழ்க்கையின் நிம்மதிக்கு
என் மெளனத்தை அளித்தேன்
பதிலாக,
என் ஆசைகளை நீ நிராசைகளாக்கினாய்

உன் சந்தோஷத்திற்கு
என் உரிமைகளை விட்டுக் கொடுத்தேன்
பதிலாக,
உன் கடமைகளை நீ மறந்தாய்

என்ன தவம் செய்தேன் நான்
இந்த பிறவியடைய !!!!!

என் கடமைகளை நான் உணர்ந்தேன்
நீ ஏனோ உணர மறந்தாய்
என் உணர்ச்சிகளை நீ மதிக்க மறந்தாய்

என் விதியை நொந்துக் கொள்ளவா!
இல்லை, உன்மேல் நான் வைத்த நம்பிக்கையை காரணமாக்கவா!

உன்னால், விதியின் கயிற்றில் என் வாழ்க்கை தொங்க
இன்றா, நாளையா என்ற கேள்வி எழும்ப
'எனக்கென்ன?' என்று நீ ஒதுங்க
உன் பாவத்திற்கு மன்னிப்பில்லை என்று உனக்கு விளங்க
வெகு நாளில்லை

கசப்பான மனம் கொண்ட உன் மீது
அன்பு செலுத்த முடியவில்லை
முயற்சி செய்யவும் விரும்பவில்லை

அன்பே உருவாக இருக்க வேண்டி நீ
ஏனோ தடம் மாறிச் சென்றாய்

உன்னை மன்னிக்க இயலவில்லை
மறக்க முயற்ச்சிக்கிறேன்

மனம் கொண்ட காயம் ஆறாது
நீ செய்த பாவம் மாறாது

Friday, March 04, 2005

பிடித்தது

எனக்கு உன்னுள் பிடித்தது
உந்தன் சிரிப்பு
மனதைக் கொள்ளையடிக்கும்
உந்தன் பார்வை
உனக்கு என்னுள் பிடித்ததென்ன?
மனமா, குணமா? - அவன்
பணம் என்றாள் அவள்

Wednesday, February 23, 2005

நன்றி!

அவள் தூங்கயில் எட்டிப் பார்த்தாய்

ஜன்னலோரம் வந்து செய்தி சொன்னாய்

கூந்தலில் சூடிய மல்லிகையின் மணம்

சிறு பூவின் அறும்புகள் போலிருக்கும் கொலுசின், ஒலி

நன்றி! என் ஒரு தலைக் காதலைப் புரிந்து கொண்ட காற்றே!!